/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3வது முறையாக செந்தில் பாலாஜி அமைச்சராக பதிவுயேற்பு
/
3வது முறையாக செந்தில் பாலாஜி அமைச்சராக பதிவுயேற்பு
3வது முறையாக செந்தில் பாலாஜி அமைச்சராக பதிவுயேற்பு
3வது முறையாக செந்தில் பாலாஜி அமைச்சராக பதிவுயேற்பு
ADDED : செப் 30, 2024 06:35 AM

கரூர்: மூன்றாவது முறையாக, அமைச்சராக செந்தில்பாலாஜி பதவியேற்று கொண்டார்.
கடந்த, 2011ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தபோது, முதல் முறையாக செந்தில் பாலாஜி, 2011 மே 16ல் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, 2015 ஜூலை 27ல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2016ல், ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது தினகரன் அணியில் இருந்தார். அதனால், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த, 2018 டிச.,14ல், தி.மு.க.,வில் இணைந்த செந்தில்பாலாஜி, 2019 ஜன., 24ல் கரூர் மாவட்ட செயலராக நியமனம் செய்யப்பட்டார். 2021 மே 7ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற போது, மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றார். அவர் மீது, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, 2023 ஜூன் 14ல் கைது செய்தது. இலாகா இல்லாத அமைச்சராக இருந்த அவர், கடந்த, பிப்., 12-ல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஐந்து நாட்களுக்கு முன், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. தொடர்ந்து, செந்தில்பாலாஜி அமைச்சராக நேற்று பதவியேற்று கொண் டார். மூன்றாவது முறையாக அமைச்சரான அவருக்கு, மீண்டும் மின்துறையும், மதுவிலக்குத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.