/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி பணி செந்தில் பாலாஜி துவக்கம்
/
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி பணி செந்தில் பாலாஜி துவக்கம்
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி பணி செந்தில் பாலாஜி துவக்கம்
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி பணி செந்தில் பாலாஜி துவக்கம்
ADDED : ஜூன் 15, 2025 01:49 AM
கரூர், கரூர் மாநகராட்சியில், 5 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி இன்று காலை (15ம் தேதி) துவக்கி வைக்கிறார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் சாலை மேம்பாட்டு பணி, கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேவர் பிளாக், சமையலறை பராமரிப்பு, கோட்டைமேடு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுதல், வடக்கு மற்றும் தெற்கு மடவளாகத்தில் சிறுபாலம், சாலை
அமைத்தல், திருவள்ளுவர் மைதானத்தில் சுற்றுச்சுவர், காந்தி நகர், சின்ன ஆண்டாங்கோவில், லட்சுபுரம் ஆகிய இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். மேலும், வி.வி.ஜி. நகர், காமராஜர் நகர், கலைஞர் நகர், பூங்குயில் ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால், சிறுபாலம் உள்பட, 21 இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. மாலையில் மாற்றுத்திறனாளி துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.