/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை: பொதுமக்களுக்கு பிரி-யாணி வழங்கல்
/
செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை: பொதுமக்களுக்கு பிரி-யாணி வழங்கல்
செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை: பொதுமக்களுக்கு பிரி-யாணி வழங்கல்
செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை: பொதுமக்களுக்கு பிரி-யாணி வழங்கல்
ADDED : செப் 28, 2024 03:58 AM
கரூர்: செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதால், கரூர் அருகே பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன், 14ல் சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம், உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுதலை செய்தது. இதனால், கரூர் அருகே செம்படாம்பாளையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்-சியில் தி.மு.க., பிரமுகரும், தொழிலதிபருமான முருகன், பொது-மக்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் பிரதாபன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்-கேற்றனர்.