/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.43.12 லட்சத்துக்கு எள், கொப்பரை, தேங்காய் ஏலம்
/
ரூ.43.12 லட்சத்துக்கு எள், கொப்பரை, தேங்காய் ஏலம்
ADDED : ஜூன் 17, 2025 02:23 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 43 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
நொய்யல் அருகில் உள்ள, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 55.69, அதிகபட்சமாக, 68.99, சராசரியாக, 63.45 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,963 கிலோ தேங்காய்கள், 4 லட்சத்து, 85 ஆயிரத்து, 535 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 231.89, அதிகபட்சமாக, 236.11, சராசரியாக, 234.65, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 180.10, அதிகபட்சமாக, 232.99, சராசரியாக, 216.99க்கு ஏலம் போனது. மொத்தமாக, 12,264 கிலோ கொப்பரை தேங்காய், 27 லட்சத்து, 75 ஆயிரத்து, 170 ரூபாய்க்கு விற்பனையானது.
எள் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 117.09, அதிகபட்சமாக, 130.59, சராசரியாக, 125.59, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 85.99, அதிகபட்சமாக, 126.09, சராசரியாக, 113.09, வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 125.99, அதிகபட்சமாக, 125.99, சராசரியாக, 125.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9,799 கிலோ எள், 10 லட்சத்து, 51 ஆயிரத்து, 865 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 43 லட்சத்து 12 ஆயிரத்து, 570 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.