ADDED : மே 21, 2026 05:58 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, வயலுார், பழையஜெயங்கொண்டம், புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். எள் சாகுபடிக்கு தேவையான நீர், கிணற்று பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது, சாகுபடி செய்யப்பட்ட எள் செடிகள் விளைச்சல் கண்டுள்ளது. விளைச்சல் கண்டுள்ள எள் செடிகள் அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சில நாட்களாக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள எள் செடிகளை, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் அடித்தால் மட்டுமே மீண்டும் எள் அறுவடை பணி துவங்க முடியும் என, விவசாயிகள் கூறினர்.
