/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
/
யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ADDED : அக் 23, 2024 07:26 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., வைரபுரி காலனியை சேர்ந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நேற்று காலை குளித்தலை யூனியன் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலிண்டர், பாத்திரம், பழுதடைந்த வீடுகளின் புகைப்படங்கள் கொண்டு வந்து, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி குடியேறும் போராட்டம் நடத்தினர். வைரபுரி காலனியில் பழுதடைந்த வீடுகள் பராமரிப்பு, புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பொது கழிப்பிடம், நாடக மேடை, சமுதாயக்கூடம், தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தனர். நிறைவேற்றாததால், பொது மக்கள் யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களிடம் யூனியன் கமிஷனர் விஜயகுமார், பஞ்., தலைவர் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து, மனுக்கள் மூலம் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போரா ட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

