/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாக்கு மட்டைக்கு கடும் தட்டுப்பாடு 3 மாதங்களுக்கு ஸ்டாக் வைக்க முடிவு
/
பாக்கு மட்டைக்கு கடும் தட்டுப்பாடு 3 மாதங்களுக்கு ஸ்டாக் வைக்க முடிவு
பாக்கு மட்டைக்கு கடும் தட்டுப்பாடு 3 மாதங்களுக்கு ஸ்டாக் வைக்க முடிவு
பாக்கு மட்டைக்கு கடும் தட்டுப்பாடு 3 மாதங்களுக்கு ஸ்டாக் வைக்க முடிவு
ADDED : ஜூலை 19, 2025 01:43 AM
கரூர் :பாக்கு உற்பத்தி சீசன் துவங்கியுள்ளதால், மட்டைக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
பாக்கு மரத்தில் இருந்து, காய்ந்து விழும் மட்டைகளை கொண்டு தட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலம் அடைந்து வருகிறது. இத்தகைய தட்டுகள் திருமணம், கோவில் திருவிழா உள்ளிட்ட சுப விசேஷங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பாக்கு மட்டைகளை கொண்டு, எட்டு இன்ச், 10 இன்ச் மற்றும் 12 இன்ச் தட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, மூன்று டிசைன்களில் மிஷின்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பாக்கு மட்டை விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பாக்கு தட்டு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதிகளிலும் இருந்து பாக்கு மட்டைகள் கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் பாக்கு காய் உற்பத்தி துவங்கும். இதனால், பெரிய அளவிலான மட்டைகள் விற்பனைக்கு கிடைக்காது. சிறிய மட்டைகள் தான் விற்பனைக்கு வரும். கடந்த மாதம், ஏழு ரூபாய்க்கு விற்ற மட்டை தற்போது, எட்டு ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதனால் எட்டு இன்ச் தட்டு, 2.50 காசுவில் இருந்து, மூன்று ரூபாய்க்கும், 10 இன்ச் தட்டு, நான்கு ரூபாயில் இருந்து, 4.50 ரூபாய், 12 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து, 5.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சுப விசேஷங்களுக்கு, பாக்கு மட்டைக்கு அதிக விலை கொடுத்து, தட்டை உற்பத்தி செய்து ஸ்டாக் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு கூறினர்.

