தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும் அமராவதி ஆற்றில் கலப்பதால் பாதிப்பு

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும் அமராவதி ஆற்றில் கலப்பதால் பாதிப்பு

சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும் அமராவதி ஆற்றில் கலப்பதால் பாதிப்பு


ADDED : மே 12, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர், சாக்கடை கழிவுடன் பிளாஸ்டிக் குப்பையும் அமராவதி ஆற்றில் கலப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்துக்கு விவசாய பணிகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து செல்லும், 17 கிளை வாய்க்கால்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது.

மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது.

தற்போது கோடை வெயில் காரணமாக அமராவதி ஆறு வறண்டுள்ளது. கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் குப்பை கழிவு அமராவதி ஆற்றில் அதிகளவில் கலக்கிறது. இதனால், அமராவதி ஆறு தற்போது, பிளாஸ்டிக் குப்பையாக காணப்படுகிறது.

அந்த பிளாஸ்டிக் குப்பை, திருமுக்கூடலுார் பகுதியில், காவிரியாற்றில் கலந்து மாயனுார் கதவணைக்கும் செல்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், குடிநீரும் மாசுபடுகிறது. அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பை கலப்பதை தடுக்கும் வகையில், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து கரூர் பாசன விவசாயிகள் கூறுகையில், 'கரூர் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுடன், பிளாஸ்டிக் குப்பையும் கலந்து வந்து, அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆறு மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்குவதால், மண்ணின் தன்மை மாறி விவசாயம் பாதிக்கப்படுகிறது. சாக்கடை கழிவு அமராவதி ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us