ADDED : செப் 09, 2026 07:29 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்;மாயனுார் ரயில்வே கேட் அருகே செல்லும் சாக்கடையில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் ரயில்வே கேட் அருகே மாயனுார் பூங்கா செல்லும் சாலையோரத்தில், கழிவுநீர் செல்லும் சிறிய கால்வாய் உள்ளது. வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீர், இந்த கால்வாய் வழியாக வருகிறது. தற்போது கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளால் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் செல்லாமல் சாலையோரத்துக்கு வருகிறது மேலும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கால்வாயை துார்வாரி கழிவுகள் தேங்காமல் இருக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
