/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் குடியிருப்பில் கழிவுநீர் தேக்கம் தொற்றுநோய் பரவும் அபாயம்
/
போலீஸ் குடியிருப்பில் கழிவுநீர் தேக்கம் தொற்றுநோய் பரவும் அபாயம்
போலீஸ் குடியிருப்பில் கழிவுநீர் தேக்கம் தொற்றுநோய் பரவும் அபாயம்
போலீஸ் குடியிருப்பில் கழிவுநீர் தேக்கம் தொற்றுநோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 25, 2025 01:54 AM
குளித்தலை:குளித்தலை டி.எஸ்.பி.,அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் போலீசாரின் குடியிருப்புகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் குடியிருப்புகள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கழிப்பறை கழிவுகள் மற்றும் கழிவுநீர் வெளியேற போதிய வழிகள் இல்லாததால், மனித கழிவுகள் அனைத்தும் குடியிருப்பு வளாகத்தை சுற்றி, தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்து வருகிறது.
காவலர் குடியிருப்பில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை  கழிவுநீர் வாகனம் மூலம் வெளியேற்றாமல் இருந்து வருவதால், துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு பகுதியில், அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.