ADDED : ஏப் 26, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் செல்லும் தெருவில் சாக்கடை கால்வாயில் தடுப்பு சுவர் இல்லை.
இந்த தெரு வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சென்று வருகின்றனர். சாக்கடை கால்வாயின், தடுப்பு சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்கள், கால்வாயில் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு தடுப்பு சுவர் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.
