ADDED : ஜூன் 13, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி பஞ்., பகுதியில், சாக்கடை
அமைக்கப்பட்டு கழிவுநீர் செல்கிறது. கடந்த சில மாதங்களாக, சாக்கடை
கால்வாய் துார் வாராமல் இருந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இது குறித்து பா.ஜ., சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு
அளிக்கப்பட்டது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.
அதன்படி
நேற்று கள்ளப்பள்ளி பஞ்சாயத்து சார்பில், துாய்மை பணியாளர்களை
கொண்டு லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, கடைவீதி பகுதியில் செல்லும்
சாக்கடை கழிவுநீர் கால்வாயில் தேங்கிய கழிவு மண் அகற்றப்பட்டது.
