/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான நிலையில் கழிவுநீர் கால்வாய்
/
மோசமான நிலையில் கழிவுநீர் கால்வாய்
ADDED : ஜூலை 11, 2025 01:16 AM
கிருஷ்ணராயபுரம், வயலுார் பஞ்சாயத்து பகுதியில், சாக்கடை கழிவு
நீர் செல்லும் கால்வாய் துாய்மை இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடைவீதி முதல், குளம் வரை கழிவு நீர் குழாய் செல்கிறது. அதேபோல், கோடங்கிப்பட்டி வார்டுகளில் சாலையோர பகுதிகளில், புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய் வழியாக கழிவுநீர் செல்கிறது. தற்போது கழிவுநீர் கால்வாய் செல்லும் வழி தடங்களில், அதிகமான செடிகள், கழிவு மண், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி இருப்பதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதிகமான கொசுக்கள் பரவுகிறது. எனவே, கால்வாய் முழுவதையும் துாய்மைப்படுத்தி, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

