ADDED : ஜூன் 21, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை நகராட்சி பகுதியில், கழிவுநீர் வடிகால் துாய்மை பணி நடந்தது.
குளித்தலை
நகராட்சி பகுதியில், 24 வார்டுகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள
வடிகால்களில் இருந்து, கழிவுநீர் வெளியேற முடியாமல் மண் திட்டுகள்
உருவாகி, கொசு உற்பத்தியாகி தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டது. கழிவு
நீரை அகற்றி துார் வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நகராட்சி தலைவர் சகுந்தலா, நகராட்சி கமிஷனர் சுதர்சன்
ஆகியோர் மேற்பார்வையில், துாய்மை பணியாளர்கள் திருச்சி - கரூர்
நெடுஞ்சாலையில் உள்ள சாலையோரம் மற்றும் கடைவீதி பகுதியில் உள்ள
வடிகால்களில் இருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, துார்வாரும்
பணியில் ஈடுபட்டனர்.
