தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணி

கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணி

கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணி


ADDED : மார் 04, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல முக்கிய வீதிகளில் புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால், பல இடங்களில் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரூர் அருகே, தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி, சில நாட்களுக்கு முன் தொடங்கியது. அதற்காக, பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் தொடர்ந்து நடக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

தான்தோன்றிமலையில் இருந்து, அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வாகனங்கள், தோரணகல்பட்டி, ராயனுார் பகுதிக்கு சென்று வருகின்றன. அந்த சாலையில், கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

எனவே, தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் கரூர் மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us