/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளப்பள்ளி பஞ்., வார்டுகளில் சாக்கடை வழித்தடம் மோசம்
/
கள்ளப்பள்ளி பஞ்., வார்டுகளில் சாக்கடை வழித்தடம் மோசம்
கள்ளப்பள்ளி பஞ்., வார்டுகளில் சாக்கடை வழித்தடம் மோசம்
கள்ளப்பள்ளி பஞ்., வார்டுகளில் சாக்கடை வழித்தடம் மோசம்
ADDED : அக் 27, 2024 03:58 AM
கிருஷ்ணராயபுரம்: கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் கழிவுகள், குப்பைகள் தேங்கியுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி நிரம்பி வழிகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட லாலாப்பேட்டை, ரயில்வே கேட், பழைய நெடுஞ்சாலை, கொடிக்கால் தெரு ஆகிய இடங்களில் சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் இருபுறமும் அதிக-மான செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.மேலும், குப்பைக்கழிவுகள் தேங்கி வருகின்றன. மழைக்காலங்-களில் மழை நீர் விரைந்து செல்ல முடியாமல் கால்வாய்களில் தேக்கம் ஏற்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்-ளது. எனவே, சாக்கடை கழிவு நீர் செல்லும் வழித்தடங்களில் குப்பை தேங்காமல் இருக்கும் வகையில், துாய்மை செய்து பராம-ரிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.