ADDED : ஜூலை 08, 2026 05:24 AM
கரூர்:கரூர் அருகே சேதமடைந்துள்ள, நிழற்கூடம் அகற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
கரூர்-சேலம்
பழைய சாலை, புகழூர் பஸ் ஸ்டாப்பில் பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள்
வசதிக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை புகழூர்,
வேலாயுதம்பாளையம், தளவாப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி
வேலுார் பகுதிகளுக்கு, டவுன் பஸ்களில் செல்லும் பொதுமக்கள்
பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நிழற்கூடம்,
சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் பயணிகள்
அச்சத்துடன், பஸ்சுக்காக காத்திருப்பதாக, நமது நாளிதழில் செய்தி
வெளியானது. இதையடுத்து, சேதமடைந்திருந்த பழைய பயணிகள் நிழற்கூடம்
இடித்து அகற்றப்பட்டது. பிறகு, புகழூர் பஸ் ஸ்டாப்பில் புதிதாக
பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.
