/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கம்
/
வெள்ளியணை அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கம்
வெள்ளியணை அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கம்
வெள்ளியணை அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கம்
ADDED : ஏப் 18, 2025 01:55 AM
கரூர்:
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நிழல் இல்லா நாள் குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மனோகர், வெங்கடேசன் செயல் விளக்கம் அளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:
சூரிய ஒளி ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட தினங்களில் மட்டும் நேர் உச்சியில் கடந்து செல்லும். இந்த நாளில் மனிதர்கள் உள்ளிட்ட எந்த பொருளின் மீதும் விழும் நிழலானது முன்னாலோ பின்னாலோ தெரியாது. இதனை பூஜ்ஜிய நிழல் நேரம் என அழைக்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வை, மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களை வட்டமாக நிற்க வைத்து, அவர்களது நிழலை உற்று நோக்கச் செய்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு கரூர் மாவட்டத்தில் அட்சரேகை, 11.4 டிகிரியில், பகல் 12:18 மணிக்கு ஏற்படும் என தமிழ்நாடு வானியல்
அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பகுதியில் சோதனைகளை செய்து பார்க்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தினோம். ஒரு குச்சியை செங்குத்தாக நிறுத்தி, அதன் நிழலில் ஏற்படும் மாற்றங்களையும் குச்சியின் உயரத்தையும் பயன்படுத்தி, அதன் மூலம் பூமியின் ஆரம், விட்டம், சுற்றளவு போன்றவை குறித்து தோராயமாக கணக்கிட முடியும்.
இவ்வாறு கூறினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வாசுகி, மகேஸ்வரி, சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.