/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
க.பரமத்தியில் செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
க.பரமத்தியில் செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
க.பரமத்தியில் செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 21, 2024 01:06 AM
கரூர், டிச. 21-
கபரமத்தியில், ஆடுகளுக்கு என்று ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுமா என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், ஏராளமான விவசாயிகள், மாடுகள், ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். நோய் தாக்கும் போது சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, பவித்திரம், முடிகணம் ஆகிய கால்நடை மருந்தகங்களுக்கு கால்நடைகளை விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இங்கு மாடுகளுக்கு வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய், ஆடுகளுக்கு ஏற்படும் நோய், அவ்வப்போது ஏற்பட்டு நோயால் பாதிக்கப்படும் போது, பரவாமல் தடுப்பதற்கு நடமாடும் வாகனம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஆடு வளர்ப்பை நம்பியுள்ள இந்த ஒன்றியத்தில், செம்மறி ஆடுகளுக்கு என்று தனியாக ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என, ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கூறியதாவது: ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றோம். குறிப்பாக ஆடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பருவமழை மாற்றத்தால் புதுவிதமான நோய்கள் கால்நடைகளை தாக்குகின்றன. உரிய மருந்து வழங்குவதற்கு முன், ஆடுகள் இறந்து விடுகின்றன. எனவே கால்நடை வளர்ப்பவர்கள் நலன் கருதி, செம்மறி ஆடுகளுக்கு என்று ஆராய்ச்சி நிலையம் க.பரமத்தி ஒன்றியத்தில் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.