ADDED : பிப் 23, 2026 06:32 AM
கரூர்; க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆடுகளை, வெறி நாய்கள் கடிப்பது தொடர்கிறது. இதனால், ஆடு வளர்ப்பு விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட, 50 க்கும் மேற்பட்ட கிரா-மங்களில், ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. ஆடுகளுக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்படும், பட்டிகளில் ஆடுகளை வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கிராமப்புறங்களில், நாய்கள், அடிக்கடி பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து நாசப்படுத்தி வருகிறது. கடந்த, ஓராண்டில் மட்டும், 300க்கும் மேற்பட்ட ஆடுகள், வெறி நாய் கடிக்கு பலியாகியுள்ளன.
இதுகுறித்து, ஆடு வளர்ப்பு விவசாயிகள் கூறிய-தாவது: க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பகு-தியில், ஆடு வளர்ப்பு மூலம் தான், விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், வெறி நாய்களால், ஆடுகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்-படுகிறது. இதனால், பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. வங்கி கடன்களை, திருப்பி செலுத்தாத நிலை உள்ளது. எனவே, க.பரமத்தி பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்-களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
