ADDED : ஏப் 25, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த, சென்னம்பட்டி முனியப்பன் கோவில் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தி, சூதாட்டம் நடைபெறுவதாக சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த, 22 மதியம், 12:00 மணியளவில் சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்ட கடவூர் சென்னம்பட்டியை சேர்ந்த முனியப்பன், 29, டிரைவர் ஜான்பாண்டியன், 24, மோகன்ராஜ், 23, பாலமுருகன், 20, முத்துக்குமார், 27, ஆகியோரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் ஜாமினில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
