/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில் சிலாப் கற்கள் சேதம்
/
கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில் சிலாப் கற்கள் சேதம்
கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில் சிலாப் கற்கள் சேதம்
கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில் சிலாப் கற்கள் சேதம்
ADDED : அக் 17, 2024 01:25 AM
கரூர், அக். 17-
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த பாலங்களின் வழியாக, நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட பாலத்தின் ஓரத்தில், நடைபாதையில் உள்ள சிலாப் கற்கள் பல மாதங்களாக சேதம் அடைந்துள்ளது. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள், நடைபாதையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், பாலத்தின் தடுப்பு சுவர்களும் சேத மடைந்துள்ளன.
ஆனால், உடைந்த பாலத் தின் தடுப்பு சுவர்களை, புதிதாக கட்டாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றர். இதனால், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு செல்லும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, கரூர் அருகே, அமராவதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகளை, மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.