/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்து கடையில் 'பேடிஎம்' வசதியால் அதிர்ச்சி
/
சந்து கடையில் 'பேடிஎம்' வசதியால் அதிர்ச்சி
ADDED : ஜன 27, 2024 04:32 AM
நாமகிரிப்பேட்டை: சந்து கடையில், 'பேடிஎம்' வசதி செய்யப்பட்டிருந்ததால், 'குடி'மகன்கள் குஷியடைந்தனர். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம் ஊராட்சியில், வாழப்பாடி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடை திறப்பதற்கு முன், மது பாட்டில்களை விற்க கடைக்கு முன்பே சந்து கடையும் உள்ளது. சந்து கடையில், 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கும் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி குவார்ட்டரில் பாதியும் கிடைக்கும். இதனால், குறைவாக பணம் வைத்துள்ள, 'குடி'மகன்கள் சந்து கடைக்கு சென்று விடுகின்றனர்.
மேலும், இவர்களுக்கு சிறப்பு வசதியாக மங்களபுரம்
சந்துகடையில், 'பேடிஎம்' ஸ்கேனர் வசதி வைத்துள்ளனர். இதனால், பணம் எளிதாக செலுத்தி, மதுபானங்களை வாங்க முடிவதால், 'குடி'
மகன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிஜிட்டல் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு சந்து கடைகளில் வியாபாரம் வளர்ந்து விட்டதாக ஆதங்கமடைந்துள்ளனர்.
மங்களபுரம் பகுதியில் சந்து கடைகளால், 24 மணி நேரமும் மது கிடைப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதியினர் வருத்தமடைந்துள்ளனர். இது
குறித்து, பா.ஜ., மாவட்ட சிந்தனை பிரிவு நிர்வாகி பாஸ்கர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

