/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடை பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
/
கடை பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
ADDED : நவ 08, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, நெய்தலுார் பஞ்., சின்னபனையூரில் வெங்கடேசன், 50, என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை, மளிகை கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர் ஒருவர், 25 ஆயிரம் ரூபாய், சிகரெட் பெட்டிகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் அருகாமையில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபர் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

