ADDED : ஏப் 24, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
கரூர்:சட்டசபை தேர்தலையொட்டி, கரூரில் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று, ஒரே கட்டமாக நடந்தது. இதற்காக, ஓட்டு போட வசதியாக, பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, தொழிலாளர் நலத் துறையும் அறிவுறுத்தி இருந்தது
.இதனால், நேற்று ஊழியர்கள் ஓட்டு போட வசதியாக கரூரில் ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் மற்றும் கொசுவலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள ஜவஹர் பஜார், கோவை சாலை, உழவர் சந்தை சாலை ஆகிய பகுதிகள் நேற்று வெறிச்சோடி
காணப்பட்டன.
