sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிலவரி செய்திகள்

/

சிலவரி செய்திகள்

சிலவரி செய்திகள்

சிலவரி செய்திகள்


ADDED : நவ 13, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் இன்று

தமிழ் கனவு நிகழ்ச்சி

கரூர்: கரூரில் இன்று தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், இன்று (13ம் தேதி) காலை 11:00 மணிக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், அறிவின் வழியே மானுட விடுதலை என்ற தலைப்பின் கீழ் பேச உள்ளனர். மேலும், கலையரங்கத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் புத்தகங்கள், நான் முதல்வன் திட்டம் சார்ந்த கையேடுகள், வேலை வாய்ப்பு அலுவலக வழிகாட்டல், உயர்கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல், மாவட்ட தொழில் மைய வழிகாட்டல், மகளிர் சுய உதவிக்குழு அரங்கு போன்ற பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் சிறந்த கேள்விகளை எழுப்பும் மாணவர்களுக்கு, பதில் அளிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கரூரில் ஓய்வூதியர் நல மீட்பு

சங்க ஆலோசனை கூட்டம்

கரூர்:கரூர் மாவட்ட, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க ஆலோசனை கூட்டம், தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.

அதில் கடந்த, 2024ல் மே முதல், அக்., 2025 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும், பணப்பிடித்தம் இல்லாமல், இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வை, நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க செயலாளர் சவுந்திரராஜன், பொருளாளர் லட்சுமணன் உள்பட பலர்

பங்கேற்றனர்.

மது அருந்தி இடையூறு

வாலிபர் 7 பேர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலை அரசு கல்லுாரி அருகில், பொது இடத்தில் மது குடித்த பரத், 21, ராமன், 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் லாலாபேட்டை பஞ்சாயத்து அலுவலகம் முன் தினேஷ்குமார், 27, சிந்தாமணிபட்டி ரைஸ் மில் அருகில் தமிழ்மணி, 37, மாயனுார் குண்டாங்கல் வாய்க்கால் கரையில் மோகன்ராஜ், 26, பார்த்திபன், 27, கரன், 25, ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மதுபானங்களை பொது இடத்தில் குடித்தனர். இவர்கள் அனைவரையும் குளித்தலை, லாலாப்பேட்டை, சிந்தாமணிபட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us