ADDED : ஜூன் 23, 2025 05:24 AM
கரூர்: கரூர் - கோவை சாலையில் தென்னிலை உள்ளது. அப்பகு-தியில் பல மாதங்களுக்கு முன், விபத்துகளை தவிர்க்கவும், போக்-குவரத்தை சீர் செய்யவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்-டன. தற்போது, சிக்னல் விளக்குகள் பழுதடைந்துள்ளன.
இதனால், கரூர் மற்றும் கோவை பகுதியில் இருந்து வாக-னங்கள், தென்னிலை வழியாக செல்ல வேண்டும். மேலும், தென்னிலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்-களும், தென்னிலை வழியாக செல்ல வேண்டும்.மேலும், கரூர் நகரில் இருந்து மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்களும் தென்னிலை வழியாக செல்ல வேண்டும். இந்நிலையில், தென்னிலையில் பழுதடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்து ஏற்ப-டுகிறது. தென்னிலை பகுதியில், பள்ளிக்கூடம் உள்ளதால், மாண-வியர்களும் சாலையை எளிதாக கடக்க முடியாமல் அவதிப்படு-கின்றனர்.
எனவே, கரூர் - கோவை சாலை தென்னிலை பகுதியில், பழுத-டைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை உடனடியாக சரி செய்ய, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்-டியது அவசியம்.