/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்
/
கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : நவ 26, 2024 01:07 AM
கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத
சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்
கரூர், நவ. 26-
கரூர் ஜவஹர் பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், வங்கிகள், ஓட்டல்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
இதனால், ஜவஹர் பஜாரில் பல மாதங்களு க்கு முன், போக்கு வரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது, சிக்னல் விளக்குகள் சேதம் அடைந்து, சரிவர
எரியாமல் உள்ளது.
இந்நிலையில், ஜவஹர் பஜாரில் சேதம் அடை ந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது.
ஜவஹர் பஜார் பகுதியில், பள்ளிக்கூடம் உள்ளதால், மாணவியர்களும் சாலையை எளிதாக கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், சேதம் அடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.