/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துார் பிரிவு சாலையில் செயல்படாத சிக்னல்
/
ஆத்துார் பிரிவு சாலையில் செயல்படாத சிக்னல்
ADDED : மே 23, 2025 01:12 AM
கரூர், கரூர், ஆத்துார் பிரிவு சாலையில் போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளதால், விபத்துகள் ஏற்படுகின்றன.கரூரில், ஈரோடு சாலை முதல் ஆத்துார் பிரிவு சாலை வரை, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்பகுதியில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. ஆத்துாரில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு, நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் சென்று வருகின்றன.
இங்கு, சிக்னல் செயல்படாமல் உள்ளது. போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. பிரிவு சாலையில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னலை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.