/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் திரும்ப பெறும் பணி
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் திரும்ப பெறும் பணி
ADDED : டிச 12, 2025 08:41 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., படிவம் திரும்ப பெறும் பணி மும்மரமாக நடந்தது.
கரூர் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் கடந்த நவ., 4 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் நடந்தது. கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்திட, வாக்காளர்களுக்கு உதவும் வகையில், சேவை மையங்கள் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் அமைக்-கப்பட்டது.
அங்கு, 2002 மற்றும் 2005ம் ஆண்டுக்கான வாக்-காளர் பட்டியல் ஆகியவற்றுடன், வாக்காளர்களுக்கு கணக்கெ-டுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர்.இந்நிலையில், வாக்காளர் பூர்த்தி செய்த படிவங்களை நேற்-றுக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், கரூர் தாலுகா அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அங்கு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்-களை அளித்தனர். அவற்றை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்-யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை வரும், 14 வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

