/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'எஸ்.ஐ.ஆர்., பணியால் தமிழகத்தில் அமைதி சீர்குலையும்'
/
'எஸ்.ஐ.ஆர்., பணியால் தமிழகத்தில் அமைதி சீர்குலையும்'
'எஸ்.ஐ.ஆர்., பணியால் தமிழகத்தில் அமைதி சீர்குலையும்'
'எஸ்.ஐ.ஆர்., பணியால் தமிழகத்தில் அமைதி சீர்குலையும்'
ADDED : அக் 29, 2025 01:43 AM
கரூர், ''வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.,) என்பது, தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும்,'' என, கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, கரூர் காங்.,- எம்.பி.,ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாநகராட்சியில், எம்.பி., தொகுதி நிதி, ஓராண்டாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி, மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்பது, தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயலாகும். பா.ஜ.,, மற்றும் தேர்தல் ஆணையம் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடக்க இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும், பா.ஜ., ஆளும் மாநிலமான அசாமில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி ஏன் நடத்தவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில்
மட்டுமே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடக்கிறது. இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வராத நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை அவசரமாக நடத்துகின்றனர்.கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றி உண்மை தான். அதற்கு பின் நடந்த, 2019, 2024 உள்பட பல தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி வருவதற்காக காந்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிரான கூட்டத்திற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

