/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெக்ஸ் தொழிலாளி மாயம் போலீசில் சகோதரி புகார்
/
டெக்ஸ் தொழிலாளி மாயம் போலீசில் சகோதரி புகார்
ADDED : மே 25, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, டெக்ஸ் தொழிலாளியை காணவில்லை என, அவரது சகோதரி போலீசில் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் செம்மடை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 35, டெக்ஸ் தொழிலாளி. இவர் கடந்த, 15ல் தங்கியிருந்த வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் சோமசுந்தரம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சோம சுந்தரத்தின் சகோதரி மீனாட்சி, 38. போலீசில் புகார் செய்தார்.
வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.