/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை பணியில் மந்தம்: வாகன ஓட்டுனர்கள் அவதி
/
சாலை பணியில் மந்தம்: வாகன ஓட்டுனர்கள் அவதி
ADDED : ஜூன் 29, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், முத்துரெங்கம்பட்டி பஞ்சாயத்து பகுதியில், புதிய சாலை பணிகள் மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, முத்துரெங்கம்பட்டி பஞ்சாயத்து கிராம சாலை பழனி செட்டியூர் வரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சாலையை புதுப்பிக்கும் வகையில், பழைய தார்ச்சாலை பொக்லைன் மூலம் பறிக்கப்பட்டது. பின்னர் சாலையில் ஜல்லி கற்கள் போடப்பட்டன, தற்போது வரை இந்த சாலை புதிதாக அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.