ADDED : செப் 27, 2026 07:02 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூரில் நேற்று
வாரச்சந்தை கூடியது, கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள்
வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
நேற்று 8
கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 8,500 ரூபாய்க்கு விற்பனையானது.
நாட்டுக்கோழி கிலோ, 430 ரூபாய்க்கு விற்கப்பட்டது. புரட்டாசி மாதம்
என்பதால் ஆடு, கோழிகள் விற்பனை மிகவும் மந்தமாக நடந்தது.
பஞ்சப்பட்டி, தோகைமலை, லாலாப்பேட்டை, குளித்தலை பகுதிகளில்
வந்திருந்த வியாபாரிகள் குறைந்தளவிலேயே வாங்கி சென்றனர். கடந்த
இரண்டு வாரங்களாக ஆடுகளின் விற்பனை மந்த கதியில் உள்ளது.
