/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி
/
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி
ADDED : ஜூன் 12, 2025 01:22 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், சின்னவெங்காயம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம், பாம்பான்பட்டி, நடுப்பட்டி மற்றும் மலையாண்டிப்பட்டி, வாத்திக்கவுண்டனுார் உள்பட பல்வேறு பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
சின்ன வெங்காயத்திற்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது விளை நிலங்கள் உழவு செய்து, சமன்படுத்தப்பட்டு நடவு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், சின்ன வெங்காயம் குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியதாக இருப்பதால், இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் நடவு பணி துவங்கப்பட்டுள்ளது.