தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நோய் பரவலால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு

நோய் பரவலால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு

நோய் பரவலால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு


ADDED : ஏப் 11, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரத்தில், நோய் பரவல் காரணமாக சின்ன வெங்காயம் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம், சிந்தலவாடி, பாப்பகாப்பட்டி கிராமங்களில், பரவலாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விதை வெங்காயம் நடவு செய்யப்பட்டு செழிப்பாக வளர்ந்து வந்தது.

தற்போது வெங்காயம் மகசூல் கிடைக்கும் நேரத்தில், வெங்காயத்தில் வெண்மை நிறமாக புதிய நோய் தாக்குதல் ஏற்பட்டு கருகி விடுகிறது. இதனால் போதிய அளவில் சின்ன வெங்காயம் வளர்ச்சி அடையவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான வெப்பம் காரணமாக பூமியில் வெப்ப நோய் ஏற்பட்டு, சின்ன வெங்காயம் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us