ADDED : செப் 25, 2026 07:28 AM
அ நிறம் | அளவு
கரூர், :புகழூர்
திருநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 45. இவரது வீட்டில், 5 அடி
நீளம் உள்ள வில்லரனை பாம்பு புகுந்துள்ளது.
இதையடுத்து, புகழூர்
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள்,
வீட்டில் பதுங்கியிருந்த பாம்பை, லாவகமாக பிடித்து, சாக்கு பையில்
போட்டனர். பின்னர், அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று
விட்டனர்.
