ADDED : ஜன 30, 2026 05:01 AM
கரூர்: புகழூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, புதுக்குறுக்குபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 45. இவர், வீட்டில் இருந்த போது, 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்தது. அக்கம்பக்கத்தினர் சேர்ந்து விரட்டியும் பாம்பு வெளியேறவில்லை. பின்னர், தீய-ணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், வீட்டில் நுழைந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து, சாக்கு பைக்குள் போட்டனர். பின், அருகாமையில் உள்ள வனப்-பகுதிக்கு சென்று விட்டனர்.
4 வயது சிறுமிக்கு பாராட்டுநாமக்கல்: திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மனைவி கங்கா. இவர்களது மகள் சஷ்ரியா தியாரதி,4. இச்சிறுமி சிறு வயது முதலே எதையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் அபார திறமை கொண்டவராக இருந்து வந்தார். இதன் காரணமாக ஏற்கனவே தனது, 2.5 வயதிலேயே, 'கலாம் உலக சாதனை புத்தகத்தில்' இடம் பெற்று இளம் திறமையாளர் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்து இருந்தார்.
இந்நிலையில் சிறுமி சஷ்ரியா தியாரதி, தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்-களையும் மிகவும் துல்லியமாக வெறும், 59 வினாடிகளில் கூறி, 'சர்வதேச சாதனை புத்தகத்தில்' இடம் பிடித்துள்ளார். இச்சிறுமி மாவட்டங்களின் பெயர்களை வரிசையாக ஒரு நிமிடம் கூட ஆகாமல் மின்னல் வேகத்தில் கூறியது அனைவரையும் ஆச்சரி-யத்தில் ஆழ்த்தியது. சிறுமியின் இந்த சாதனையை பாராட்டும் வகையில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா, பாராட்டு தெரி-வித்தார்.
