ADDED : செப் 10, 2026 07:05 AM
குளித்தலை:கரும்பு தோட்டத்தில் பாம்பு தீண்டி தொழிலாளி உயிரிழந்தார்.
குளித்தலை
அடுத்த சிந்தலவாடி பஞ்., மகிளிப்பட்டியை சேர்ந்தவர்
வெங்கடாசலம், 60. இவர் சேவகனுாரில் உள்ள கோவக்குளத்தை சேர்ந்த
செந்தில்குமார் என்பவரின் கரும்பு தோட்டத்தில் கடந்த 8ம் தேதி காலை
9:15 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது
கணுக்காலில் கட்டுவிரியன் தீண்டியுள்ளது.
அருகில்
இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவக்குளம் அரசு மருத்துவமனையில்
அனுமதித்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர், ஏற்கனவே இறந்து
விட்டதாக தெரிவித்தார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக, கரூர்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது
குறித்து அவரது மகன் பரணிதரன், 20, கொடுத்த புகாரின் படி, மாயனுார்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
