ADDED : அக் 08, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த, கடவூர் யூனியன் மேலசேவாப்பூரை சேர்ந்த முருகேசன், 41, விவசாய
கூலித் தொழிலாளி. கடந்த, 4ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக்
கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு, 1:30 மணியளவில் இடுப்பில் கட்டு
விரியன் பாம்பு தீண்டியுள்ளது. அவரது அண்ணன் உதவியுடன் கடவூர் ஆரம்ப
சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மறுநாள்
மாலை அவர் இறந்தார்.இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
