/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு
/
சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு
ADDED : ஆக 31, 2025 04:39 AM
கரூர்;கரூரில், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க, கரூர் மாவட்ட கிளை மாநாடு நேற்று அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
சமூக
நல அலுவலக கண்காணிப்பாளர் வினோத் தலைமை வகித்தார். அதில், சமூக
நலத்துறையில் முதுநிலை பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும், ஊதிய
முரண்பாடுகளை களைந்து, நிலுவை தொகையை வழங்க வேண்டும்,
கண்காணிப்பாளர் பதவியில் முதுநிலையை அடிப்படையாக கொண்டு, பதவி
உயர்வு வழங்க வேண்டும், பாலின பாடுபாடு இல்லாமல் ஆண், பெண் இரு
தரப்பினருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பிரின்டர் மற்றும் இணையதள
வசதிகள் செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில்
நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் ரவி, துணைத் தலைவர் தினகரன், துணை
பொதுச்செயலாளர்கள் வெற்றிவேல், ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள்
மகேந்திரன், ரபிக், ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.