ADDED : செப் 22, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், நல்ல முத்துபாளையத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி; அதே ஊரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி; இருவரும் அண்ணன், தம்பிகள். ராமசாமி, பாக பிரிவினை உள்ள நிலத்தை தம்பி வெள்ளைச்சாமிக்கு கொடுக்காமல், அவரே விவசாயம் செய்து வந்துள்ளார்.
கடந்த, 15ல், வெள்ளைச்சாமியின் மகன் வைரப்பெருமாள், 33, தன் தந்தைக்குரிய நிலத்தை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, ராமசாமியின் மனைவி முருகேஸ்வரிக்கும், வைரப்பெருமாளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முருகேஸ்வரியை, வைரப்பெருமாள் குச்சியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து முருகேஸ்வரி, 54, கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், வைரப்பெருமாளை கைது செய்தனர்.