ADDED : ஆக 13, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த நல்லுார் பஞ்., கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம், 50; விவசாயி. இவரது மகன் சஞ்சய்குமார், 20; கோவையில், முக அழகு கலை, மூன்று மாத படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை, 15ல் வீட்டிலிருந்து கோவைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் குறித்து ஏதும் தகவல் இல்லாததால், சுந்தரம், கோவைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, சஞ்சய்குமார் வீட்டிற்கு வரா-தது தெரியவந்தது. மகனை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

