ADDED : அக் 07, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த, கடவூர் தேவர்மலை பஞ்., குடிவண்டு பகுதியை சேர்ந்தவர்
தான்தோணி, 31. விவசாய கூலி தொழிலாளி.
இவரது மகன் ராமன், 10,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 4 மதியம் 2:00 மணியளவில் விளையாட சென்ற ராமன் மீண்டும்
வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது
மகனை காணவில்லை என தந்தை கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
