ADDED : மே 16, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
குளித்தலை : குளித்தலை அடுத்த உப்பிலியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா, 41, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் பூபதி, 21, கொசூரில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் சரிவர வீட்டுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதை தாய் கண்டித்துள்ளார். கடந்த 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பேக்கரி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகனை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
