ADDED : மே 24, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த நெய்தலுாரை சேர்ந்த பானுமதி, 47, என்பவரின் மகன் கோபிநாத், 29. இவரது மனைவி உஷா பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். கோபிநாத் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை
5:00 மணியளவில் பஸ் ஏறி சென்ற கோபிநாத், வெகு நெரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
