/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா
ADDED : அக் 26, 2025 12:45 AM
கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.
பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் ஆறுமுக பெருமானுக்கு அபிேஷகம், காப்பு கட்டுதல், லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த, 23 முதல் நாள்தோறும் ஆறுமுக பெருமானுக்கு அபிேஷகம் நடந்து வருகிறது.
நாளை காலை, 10:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு கந்த சஷ்டி அபிேஷகம், மாலை, 3:30 மணிக்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை, 4:00 மணிக்கு நான்கு மாடவீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 28 காலை, 10:30 மணிக்கு ஆறுமுகபெருமானுக்கு திருக்கல்யாண உற்வசம், மாலை, 5:30 மணிக்கு கல்யாண உற்சவ காட்சியுடன், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

