ADDED : ஏப் 26, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மகளிப்பட்டி, உடைந்தோட்டம், சிந்தலவாடி, புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உளுந்து சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வளர்ந்து வரும் உளுந்து செடிகளில், காய்கள் பிடித்த பிறகு அறுவடை செய்து, உளுந்து தனியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடிய பயிராக உளுந்து உள்ளது.
