/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கட்டையால் அடி: 4 பேர் மீது வழக்கு
/
சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கட்டையால் அடி: 4 பேர் மீது வழக்கு
சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கட்டையால் அடி: 4 பேர் மீது வழக்கு
சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கட்டையால் அடி: 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2025 01:46 AM
கரூர், க.பரமத்தி அருகே, தொழில் ரீதியாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரை உருட்டு கட்டையால் அடித்த, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
க.பரமத்தி அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரணிகுமார், 22; சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் தொழில் ரீதியாக, ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த, 22ல், க.பரமத்தி அருகே, மேட்டுக்கடை விநாயகர் கோவில் பகுதியில் பரணிகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது, சம்பவ இடத்துக்கு சென்ற கருப்பசாமி, அவரது நண்பர்கள் இளங்கோவன், பொன்னன், தங்கவேல் ஆகியோர் சேர்ந்து,
பரணிகுமாரை உருட்டு கட்டையால் அடித்துள்ளனர். அதில், படுகாயமடைந்த பரணிகுமார் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, கருப்பசாமி உள்பட, நான்கு பேர் மீது க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.