/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென் மண்டல அளவிலான ஜூடோ போட்டி: 138 பள்ளிகள் பங்கேற்பு
/
தென் மண்டல அளவிலான ஜூடோ போட்டி: 138 பள்ளிகள் பங்கேற்பு
தென் மண்டல அளவிலான ஜூடோ போட்டி: 138 பள்ளிகள் பங்கேற்பு
தென் மண்டல அளவிலான ஜூடோ போட்டி: 138 பள்ளிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 12, 2025 01:20 AM
கரூர் :தென் மாநில மண்டல அளவிலான ஜூடோ போட்டி, கரூர் அருகே நேற்று தொடங்கியது.
தென் மாநில மண்டல அளவிலான, சி.பி.எஸ்.இ., ஜூடோ சாம்பியன் ஷிப் போட்டி நேற்று, கரூர் பரணி பார்க் பள்ளியில் தொடங்கியது. அதில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 138 பள்ளிகளை சேர்ந்த, 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகள் நாக்-அவுட் மற்றும் ரெபிசார்ஜ் முறையில் நடக்கிறது. நாளை (13ல்) இறுதி போட்டி நடக்கிறது.தொடக்க விழா போட்டிகளை, பரணி பார்க் பள்ளி குழும தாளாளர் மோகனரங்கன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, ஜூடோ சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பிரமணியன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முருகேசன், விளையாட்டு அலுவலர் குணசேகரன், உடற்கல்வி ஆய்வாளர் சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.